மண்முனைப்பற்றின் பௌர்ணமி கலை விழா!!
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஷின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமும் இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா நிகழ்வு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் (2025.10.06) இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூசகர் என். சிவாகரன், பிரதம அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், கணக்காளர் ஏ.மோகனகுமார் மற்றும் கௌரவ அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் எஸ்.டிலக்ஷன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மகேசதுரை மலர்விழி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ராதா கமலதாஸன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் பா.ரமேசன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
அத்துடன் கலைஞர்கள், பொதுமக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலைமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வு ஆலய பூசையுடன் ஆரம்பமாகி மங்கல வாத்தியங்கள் முழங்க அதிதிகள் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து, பரமநயனார் அறநெறிப்பாடசாலை மாணவியின் தேவாரத்துடன் ஆரம்பமாகி ஆலய பூசகரால் ஆசியுரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




