ஆசிரியர் தின விழா வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.







புத்தகங்களின் பக்கங்கள் முடிவுறும் ஆசிரியர்களின் தாக்கங்கள் முடிவுறுவதில்லை" எனும் எண்ணக்கருவை மையமாகக் கொண்டு ஆசிரியர் தின விழா வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

ஆசிரியர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் 
வித்தியால அதிபருமான யூ.எல். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அனைத்து ஆசிரியர்களும் ஒரே வர்ண ஆடையுடன் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.

பாடசாலை கீதம், தேசியக்கீதம் மற்றும் ஆசிரியர் கீதம் ஆகியவை ஆசிரியர்களால் இனிமையாக இசைக்கப்பட்டு விழாவின் தொடக்கத்தை சிறப்பித்தன.

பாடல், பேச்சு, நடனம், உரைச்சித்திரம், கவிதை, பன்மொழிப்பாடல்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக ஆசிரியர்கள் தங்கள் புலமை, திறமை, கலைநயங்களை வெளிப்படுத்தினர்.

பிரதேசத்தை சேர்ந்த மலேசியா மற்றும் இலண்டன் வாழ் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்களுக்கு பெறுமதியான பரிசுப்பொருட்களை அன்பளிப்பாக வழங்கியதோடு, பிரதேச நலன் விரும்பி ஒருவரால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பகல் போசன விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

  ந.குகதர்சன்