போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

 


 

இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையான சுமார் பத்து மாத காலப்பகுதியில், நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த காலப்பகுதியில், பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 320 சுற்றிவளைப்புகளில், போதைப்பொருள் தொடர்பில் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 938 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, 60 இலட்சத்து 19 ஆயிரத்து 343 க்கும் அதிகமான நபர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர்.

 கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வகைகளில், ஐஸ் (Ice) போதைப்பொருளே அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.