மட்டக்களப்பு மண்முனை மேற்கு உன்னிச்சை-8 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சரஸ்வதி சிலை திறந்து வைக்கப்பட்டது.
















நவராத்திரி தினத்தினை முன்னிட்டு "அறிவார்ந்த கல்வி சமூகத்தை கட்டி எழுப்புவோம்" எனும் தொணிப் பொருளில் வளைகுடா வானம்பாடிகள் சமூக நல மேம்பாட்டு அமைப்பினால் உன்னிச்சையில் சரஸ்வதி சிலை திறந்து வைக்கப்பட்டது. 

இதன் போது அதிதிகள் வரவேற்கப்பட்டு சிலைக்கான நினைவுபடிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு சிலை திறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து வளைகுடா வானம்பாடிகள் சமூக நல மேம்பாட்டு அமைப்பினரை கௌரவிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தினால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. 

உன்னிச்சை-8 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளைகுடா வானம்பாடிகள் சமூக நல மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன பலரும் கலந்து கொண்டனர்.