வாழ்விட வாரம் அக்டோபர் 01 முதல் 05 வரை நாடளாவிய ரீதியில் நடைபெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ. சரத் அவர்கள் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு இரண்டாம் கட்டமாக 27 நபர்களுக்கான காசோலைகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பெயரில் பிரதி அமைச்சர் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் ரீ. சுபாஸ்கரன் எற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 27 நபர்களுக்கான 4.05 மில்லியன் பெறுதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
ஒரு மில்லியன் பெறுமதியான நிதியானது பயனாளிகளுக்கு ஐந்து கட்டமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஜனாதிபதி அவர்களினால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார், மேலும் பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு பிரஜாசக்தி திட்டத்தின் மூலம் பிரதேச செயலக அதிகாரிகளுடாக உங்களுக்குத் தேவையான அபிவிருத்தி திட்டங்களை நிங்களே தீர்மானித்து மேற்கொள்ள முடியும் என கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியோக செயலாளர், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
வீடு அற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்குவதுடன் பயனாளிகளின் நிதி பங்களிப்புடன் இவ் வீடுகள் புர்த்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வரதன்
.jpeg)



.jpeg)



.jpeg)





