2025ம் ஆண்டினுடைய நவராத்திரி கால வாணி விழா பாராளுமன்றத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது















புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் இணைந்து நடாத்திய நவராத்திரி கால வாணி விழா இம்முறையும்  மிக சிறப்பாக இடம் பெற்றது

கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் விசேட ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழாவுக்கு கௌரவ சபாநாயகர் அனுமதி வழங்கிதை தொடர்ந்து பாராளுமன்ற ஆராய்ச்சி அலுவலர் திரு. விஸ்வலிங்கம் முரளிதாஸின் ஒருங்கிணைப்பில் இந்து குருமார் அமைப்பின் தலைவரும் அச்சுவேலி  சிவஸ்ரீ குமாரசுவாமி குருக்கள் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு வை க வைத்தீஸ்வர குருக்கள் தலைமையில் பூஜைகள் நடைபெற்று காலாஞ்சுடன் கூடிய திருவருள் பிரசாதம் வழங்கி வைக்கப்பட்டது 

உலகம் முழுவதும் தமிழ் இந்து மக்களால் பெருமையுடன் கொண்டாடப்படும் நவராத்திரி விழா நாட்டின் உயர்ந்த மரியாதைக்குரிய பாராளுமன்றத்தில் கொண்டாடப்படுவது ஒரு சிறப்பான நிகழ்வாகும்
கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இவ்விழா நமது கலாசாரம் மதம்  மொழி ஆகியவற்றை ஊக்குவிக்கவும் மக்களிடையே ஒற்றுமை புரிதல் இணைந்த வாழ்வு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் குருக்கள் சார்ந்த குழுவினருடைய முயற்சியில் பெருமை அடையும் வகையில்  இலங்கை பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா நடைபெற்றமை சிறப்பு அம்சமாகும்.