மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வயதிற்கு மேற்பட்ட மூன்று முதியவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் கௌரவிக்கப்பட்டார்கள்.













 







கிழக்கு மாகாண  சமூக சேவை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான சர்வதேச முதியோர் தின நிகழ்வு இன்று 09.10. 2025 மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் மற்றும் மாகாண சுகாதார சுதேச மற்றும் சமூக சேவைகள் நன்னடத்தை சிறுவர்கள் அமைச்சின் செயலாளர்  எஸ். திசாநாயக்க  கலந்து கொண்டதுடன் மாகாண அமைச்சின் செயலாளர்
மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கலந்து கொண்டனர்.

 இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 ற்கு அதிகமான வயதிற்கு மேற்பட்ட மூன்று முதியவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால்  பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து பண பரிசல்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன்,  கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக செயல்பட்ட முதியோர் இல்லங்களுக்கு சான்றிதழ் கேடயமும் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

ஏனைய  அதிதிகளினால் முதியோர்களுக்கு மலர்மாலையும் கேடயங்களும் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு இருக்கை நாற்காலியும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் அரச  அதிகாரிகள் முதியவர்கள் பொதுமக்கள் என  பலர் கலந்து கொண்ட நிகழ்வில் முதியவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.