உலகளவில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 15 மில்லியன் இளைஞர்கள் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


உலகளவில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 15 மில்லியன் இளைஞர்கள் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் வயது முதிர்ந்தவர்களுடன், ஒப்பிடும்போது ஒன்பது மடங்கு அதிகமாக இளைஞர்கள் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். 
 
அத்துடன், நிக்கோடின் கொண்ட இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகும் போக்கு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 
 
இதேவேளை, உலகளாவிய புகையிலை பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 
 
2024 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புகையிலை பயன்பாடு 1.38 பில்லியனில் இருந்து 1.2 பில்லியனாகக் குறைந்துள்ளது. 
 
அதன்படி, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இ-சிகரெட்டுகள் போன்ற மாற்றுப் பொருட்களுக்குத் திரும்பியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.