யுனிவர்சல் யோகா ஸ்போட்ஸ் பெரடேஷன் UYSF இனால் செப்டம்பர் மாதம் 3ம் திகதி மலேசியாவில் நடாத்தப்பட்ட Asian Pacific 3.0 Yoga Champion Ship போட்டியில் இலங்கை சார்பாக மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோக வித்தியாசாலை மாணவர்கள் போட்டியிட்டு 3 தங்கப்பதக்கங்களையும் 1வெள்ளி பதக்கத்தினையும் பெற்று மட்டக்களப்பு மண்ணிற்கும் இலங்கை நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ் போட்டி நிகழ்வில் சக்தி ஆனந்த யோக வித்தியாசாலை நிறுவனர் சிவசக்தி சிவபாதசுந்தரம் அவர்கள் யோகத்துறையில் ஈட்டிய சாதணைகள், சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி Grand Master of yoga என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளனர்.இப்போட்டியில் 5-7 வயது பெண்கள் பிரிவில் மட்/வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி A.ஜயஸ்ரீ அவர்கள் 1ம் இடத்தையும் 13-15 வயது பெண்கள் பிரிவில் மட்/புனித சிசிலியாஸ் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி R.மேரி கெல்சி அவர்கள் 1ம் இடத்தையும் அதே பிரிவில் மட்/மகாஜனா கல்லூரி மாணவி S.ஷதுராத்மி 2ம் இடத்தையும் ஆடவர் பிரிவில் R.அபிராம் அவர்கள் 1ம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத்துடன் ஜயஸ்ரீ அவர்கள் ரிதமிக் யோகா போட்டியிலும் பங்குபற்றி 1ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இவ் மாணவர்கள் அனைவரும் மட்/சக்தியானந்த யோக வித்தியாசாலை நிறுவனர் சிவசக்தி சிவபாதசுந்தரம் , யோக ஆசிரியர் ரவிச்சந்திரன் அபிராம் ஆகியோரினால் நேரடியாக பயிற்றுவிக்கப்பட்டு இவ் ஆசிய போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்றுள்ளனர்.

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)





