வட கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்விகளை பெற்றுக்கொள்வதற்கு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பாடலை ஏற்படுத்தி உயர் கல்வி, பட்டப்படிப்பு, முதுமாணி, கலாநிதி பட்டங்கள் போன்ற உயர் கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களையும் இன்சிவ் குளோபல் நிறுவனமானது வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது.
இவ் வருடத்திற்கான எடியு எக்ஸ்போ Edu expo நிகழ்வில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தின் பணிப்பாளரினால் வெளிநாடுகளில் உயர் கல்வி தொடரவுள்ள மாணவர்களுக்கான தெளிவூட்டல்களை வழங்கியதுடன் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவுள்ள மாணவர்களுக்கான இலவச மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்விவ் குளோபல் நிறுவனமானது தனது கிளையினை விரிவுபடுத்தி பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கனவை நனவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பிரித்தானிய பல்கலைக்கழக இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி டிலக்சினி விக்ட்டர் கலந்து கொண்டு மாணவர்களை தெளிவூட்டினார்.

























