கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரியுமான Dr.சி.சிவலக்சன் அவர்களின் முயற்சியின் பயனாக இன்று கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர் நோக்கும் பாரிய சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் மக்களின் நலன் கருதி சந்திவெளி பிரதேச வைத்திய சாலையில் மகப்பேற்று விடுதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மிக நீன்ட காலமாக இயங்காமல் வந்த இந்த மகபேற்று விடுதியானது Dr.சி.சிவலக்சன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய அன்மையில் வாழைச்சேனை மகப்பேற்று வைத்தியர் குழாம் ஒன்று இவ் விடுதியினை பார்வையிடப்பட்டதுடன் இவ் விடுதியினை மீண்டும் இயங்க வைப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் அதனை துரிதமாக செயப்படுத்துவதற்கு எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி Dr.R.முரளீஸ்வரன் sir. அவர்களின் ஒத்துழைப்புடன் மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.