கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் (Christell Luxury Wellness) நிறுவனமானது கடந்த வார இறுதியில் One Galee Face Mallல் முகப்பரு தடுப்புக்கான ஒரு ஆழமான மற்றும் தகவல் தரும் உடனடி தோற்ற அனுபவத்துடன், அறிவியல் பூர்வமான முகப்பருவுக்கெதிரான முயற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்கான பொதுமக்களுக்கான நிகழ்வொன்றை நடத்தியது. இந்நிகழ்வில் கிறிஸ்டெல் முகப்பரு ஆய்வு நிலையமானது இலங்கையில் முகப்பரு பராமரிப்பை மீள் வரையறை செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இலங்கையின் முதல் முக ஸ்கேனரைப் பயன்படுத்தி சரும பகுப்பாய்வை வழங்கியதுடன் தனிப்பயனாக்கப்பட்ட சரும பராமரிப்பு வழிகாட்டுதல், நிபுணர் ஆலோசனைகள், தயாரிப்பு பரிந்துரைகள் மற்றும் முகப்பருவின் தோற்றங்களை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட அமர்வுகளையும் வழங்கியது.
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற நிகழ்வானது, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்ததுடன் அவர்களில் பலர் விளையாட்டுகள், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் கிறிஸ்டலின் நிபுணர்கள் குழுவினர், சரும பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டனர். வார இறுதியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, தளத்தில் நடைபெற்ற முகப்பரு தடுப்பு குறித்த குழு விவாதம் ஆகும். அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் முகப்பரு சிகிச்சை எவ்வாறு சரும ஆழமான தீர்வுகளுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பது குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த குழு நிகழ்வானது குடல் ஆரோக்கியத்திற்கும் முகப்பருவிற்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசிய கிறிஸ்டலின் ஊட்டச்சத்து ஆலோசகர் டாக்டர் ரைதா வஹாப் டேனியல் அளித்த சக்திவாய்ந்த செய்தியுடன் ஆரம்பமானது. “உங்கள் குடல் தான் உங்களுக்கு எஜமானன். இது உங்கள் சருமம் உட்பட உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது,” என்று அவர் விளக்கினார், பதப்படுத்தப்படாத, உள்ளூர் உற்பத்திகள் நிறைந்த உணவானது சரும ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் அதிக பங்கு வகிக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார். “நாம் அடிக்கடி மத்திய தரைக்கடல் உணவைப் பற்றி கேள்விப்படுகிறோம், ஆனால் நமது சொந்த உணவான சிவப்பு பச்சை அரிசி, வல்லாரை கீரை, பருப்பு மற்றும் மீன் என்பன சமச்சீரான, ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” கொய்யா மற்றும் இலை கீரைகள் போன்ற விட்டமின் சி நிறைந்த உள்ளூர் உணவுகளுடன் கொலாஜன் புரத சேர்க்கைகளை இணைப்பதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என அவர் கூறினார்.
கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் பற்றி
டொக்டர் ஷானிகா அர்செகுலரத்னவால் நிறுவப்பட்ட கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ்
என்பது இலங்கையின் முதன்மையான அழகியல் மற்றும் சரும சுகாதார
மருத்துவமனையாகும். கிறிஸ்டெல் முகப்பரு ஆய்வுநிலையம் என்பது மேம்பட்ட சரும
மருத்துவ அறிவியல், வாழ்க்கை முறை வழிகாட்டுதல் மற்றும் உணர்ச்சி
நல்வாழ்வு ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட முகப்பரு மற்றும்
முகப்பரு வடுக்களுக்கான சிகிச்சைகளை வழங்கும் பயிற்சி நிலையத்தில் உள்ள
ஒரு சிறப்புப் பிரிவாகும். கிறிஸ்டெல் ஆனது பல துறைசார் நிபுணர்களின்
உதவியுடன் சரும பராமரிப்பிற்கான சிகிச்சைகளை வழங்கி வருகிறது.