மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை வழங்குவதற்கான ஒரு நாள் பயிற்சி நெறி .

 


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை வழங்குவதற்கான ஒரு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) இடம் பெற்றது.

அதிகரித்து வரும் திருமண முறிவுகளை குறைக்கும் நோக்கில் திருமணப்பதிவாளர்களுக்கும் மேலதிக மாவட்ட பதிவாளர்களுக்கும் திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணையினை மணமக்களுக்கு வழக்குவதற்கான பயிற்சிகள் இதன் போது உளநல வைத்திய அதிகாரி யூடி ரமேசினால் வழங்கப்பட்டது.

திருமணப்பதிவாளர்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இணைப்பாக்கத்தின் மூலம் இளைய சமூகத்தினரின் திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணையை வழங்கி வலுப்படுத்துவதற்கான பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இதன் போது திருமண சட்ட ஏற்பாடுகள், வீட்டு வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து வழக்குகளின் அதிகரிப்பு தொடர்பான மதிப்பீடுகள்,
அதிகரித்து வரும் திருமண முறிவுகளை குறைக்கும் நோக்கில் திருமணப் பதிவாளர்களுக்கும் மேலதிக மாவட்ட பதிவாளர்களுக்கும் திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை மணமக்களுக்கு வழக்குவதற்கான பயிற்சிகள் இதன் போது உள நல வைத்த்திய அதிகாரி யூடி ரமேசினால் வழங்கப்பட்டது.

மேலும் வீட்டு வன்முறைக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் தொடர்பாக சட்டத்தரணி திருமதி சுபாஷினி றுமணன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே. நடராஜா, உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மேலதிக மாவட்ட பதிவாளர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், திருமணப்பதிவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு எதிராக இடம் பெறும் வீட்டு வன்முறைகளுக்கான 1938 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்வதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வுகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.