யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது .

 


யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். 

இதன் கீழ், வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள் மற்றும் குளிர்பதன வசதிகள், வலைகளை சீரமைக்கும் வசதிகள், ஏல மண்டப வசதிகள் மற்றும் வானொலி தொடர்பு மைய வசதிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன்போது யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர்.

கடந்த காலங்களில் ஜனநாயகம் பற்றி அதிகம் பேசிய அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் பொலிஸார் கடந்த காலங்களை போன்று மூர்க்கத்தனமாக செயற்பட்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.