மட்டக்களப்பு வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பெரும்போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் குழுக் கூட்டம்.


















மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம்  பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் ஏற்பாட்டில்  இடம்பெற்றது.

அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன் தலைமையில்  முன்னெடுக்கப்பட்டது 
   
சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் ஊடாக  நவகிரி, தும்பங்கேணி மற்றும் வெல்லாவெளி,மண்டூர்,  
பழுகாமம் ஆகிய கமநல பிரிவுகளில் சுமார் 23200 மேற்பட்ட  ஏக்கர்களில் விதைப்பு செய்யப்படவுள்ளது , இது    தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டது