மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் மற்றுமொரு விபத்தில்ஐவர் வைத்தியசாலையில்.










 திங்கட்கிழமை (09) காலை 11.00 மணியளவில் நாவலடியை அண்மித்த  பிரதான வீதியில்  திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம்   வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி  வீதியை விட்டு அகன்று சென்றது.  

மாங்கேனியிலிருந்து குடும்பமாக பயணித்த  நால்வரில் 30 வயது மதிக்கத்தக்க தாயார் மற்றும்  கைக்குழந்தை வாழைச்சேனை போதன வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.


கனரக வாகனத்தில் பயணித்த வாகனத்தின் உதவியாளர் ,முச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற சாரதி உட்பட சிறுவர் ஒருவர் காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை  போக்குவரத்து பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஆர்.நிரோசன்)