பொன்னியின் செல்வன் பட பாடலால் சர்ச்சையில் சிக்கிய இசை அமைப்பாளர் ரகுமான்

 


மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 
 
இந்த திரைப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா, ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். 
 
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் உள்ள 'வீர ராஜ வீர' என்ற பாடல், பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் தாஹர் என்பவரின் தந்தை ஃபையாசுதின் தாஹர் மற்றும் மாமா ஸாஹிருதின் தாஹர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இசையமைப்பட்டுள்ளதாக தெரிவித்து, குறித்த பாடல் மீது காப்புரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த வழக்க விசாரணையின் போது ஏ.ஆர். ரஹ்மானுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அனைத்து சமூக ஊடகங்களிலும் குறித்த பாடலுக்கான தனியுரிமையை தாஹர் சகோதரர்களின் பெயர்களில் கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இந்தநிலையில், குறித்த உத்தரவுக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார்.