(தியாகி திலீபனின் நினைவுரையில் ஜனநாயகப் போராளி உபதலைவர் என்.நகுலேஸ்)
தமிழின விடுதலைப் போராட்ட வரலாற்றில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜே.வி.பி இன் செயற்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்த விடயங்களே. விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு இணைந்த வடக்கு கிழக்கினைப் பிரித்த பெருமையும் அவர்களையே சாரும்.
ஆனால் தற்போதைய நிலையில் அவர்களின் செயற்பாடுகள் தேசியப் பிரச்சனை உள்ளிட்ட தமிழ் மக்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்த செயற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருந்தாலும் நாடு என்ற ரீதியில் அவர்களால் முன்னெடுக்கப்படும் பலவேறு செயற்திட்டங்களையும் நாங்கள் பாராட்டுகின்றோம்.
ஆனாலும் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் உட்பட நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆரம்பம் இந்த நாட்டில் தேசிய இனமொன்றுக்கான உரிமை மறுக்கப்பட்டது, அவர்கள் ஒடுக்கி நசுக்கப்பட்டதுமே ஆகும். அதற்கான நிரந்தர தீர்வே நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்தாக இருக்கும்.
இன்றைய நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எமது போராளிகளை பயங்கரவாதிகளாக விழிக்காமல் போராளிகள் என்றே விழிக்கின்றார்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் விளைவுகள் பற்றி தியாகி திலீபன் அன்றே கணித்த தீர்க்க தரிசனைத்தை பாராளுமன்றில் உரைக்கின்றார்கள். இவையெல்லாம் வரவேற்கத்தக்கனவே. ஆனாலும் இவை வெறும் வாயினால் வரும் கருத்துகளாக இல்லாமல் உளமார்ந்ததாக இருக்க வேண்டும். எமது போராளிகள் இத்தனை தியாகங்களையும் எதற்காக மேற்கொண்டார்களோ அந்த தியாகங்களுக்கான அர்த்தம் ஒரு அர்த்தமுள்ள நிரந்தரத் தீர்வு மூலம் இந்த அரசினால் உணர்த்தப்பட வேண்டும்.
தற்போதய அரசாங்கத்தின் மேற்சொன்ன விடயங்கள் கடந்தகால கைங்கரியங்களுக்காக அவர்களால் முன்னெடுக்கப்படும் பிராயச்சித்தமாகவே எமது கட்சி பார்க்கின்றது. தமிழ் மக்கள் இந்த நாட்டில் சகல உரிமைகளுடனும் வாழ்வதற்கான சூழ்நிலை நிலையானதாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதுவே இன்றைய எமது தியாகி திலீபனின் நினைவு தினத்தில் நாம் அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்று தெரிவித்தார்.
.jpeg)





