கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற மாகாண பாடசாலைகளின் விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வு












கல்வி அமைச்சினால் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு   வெபர்  மைதானத்தில் மாகாண  விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே குகநாதன் தலைமையில் இடம் பெற்றது
இன்றைய இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலாள் ரத்தின சேகர கலந்து கொண்டு இவ் விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்
இந்த விளையாட்டு நிகழ்வு தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம் பெற்று எதிர்வரும் ஏழாம் தேதி இறுதி நாள் நிகழ்வுகள் இடம் பெற உள்ளது

 மட்டு நகரின் பிரபல பெண்கள் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றது
இந்த விளையாட்டு நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கல்வி வளையங்களில் உள்ள  தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகலில் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டன
இன்றைய இந்த ஆரம்ப நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சிரியா குணவர்த்தன விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் கல்வி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்