மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்டு காயமடைந்த நிலையில் சுற்றித் திரியும் யானை!.








மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்களை அண்டிய பகுதியில் காணப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை முதல் குறித்த யானை குறித்த இடத்திலேயே சஞ்சரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒரு காட்டு யானை சுற்றித் திரிகிறது. இது குடியிருப்புகள் மற்றும் வயல்வெளிகளுக்குள் நுழைந்து விடுவதால் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உணர்கின்றனர்.

அதன் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது விவசாய நிலங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்

 காலில் பலத்த காயங்களுடன்  வனவிலங்கு அலுவலகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் அதற்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதைப் பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகவும் சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது