இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பதில்லை

 


நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற விரிவுரை ஒன்றின் போதே அவர் இந்தனைக் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த நீல் இத்தவெல, 

2024 ஆம் ஆண்டில், தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம். 

அதில், பொதுமக்கள், இலஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகக்கூடிய நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்த 10 நிறுவனங்களைப் பற்றி  கூறுகிறேன். 

முதலாவது பொலிஸ், இரண்டாவது அரசியல், மூன்றாவது சுங்கம். மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, பாடசாலை மற்றும் அமைச்சு. 

அத்துடன் காணிப் பதிவு அலுவலகங்கள், மாகாண சபைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச செயலகங்கள், பதிவாளர் நாயக அலுவலகம் போன்றவை பொதுமக்களின் கருத்தாகும். 

இருப்பினும், பொருளாதாரத்தை முக்கியமாக பாதிக்கும் 5 நிறுவனங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். 

ஒன்று சுங்கம், இரண்டாவது நிறுவனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி திணைக்களம். 

அதேபோன்று மதுவரித் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் வாகனப் பதிவு அலுவலகம். 

அதேபோன்று மேலும் நிறுவனங்கள் உள்ளன. தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம். 

இது போன்ற நிறுவனங்களில் ஊழலிக்கு மேல் ஊழல் இடம்பெறுகின்றன. அவற்றின் மூலம், ஊழல் செய்பவர்களுக்கு ஒரு புகலிடம் உருவாக்கப்பட்டு, பணமோசடிக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

பின்னர், நான் குறிப்பிட்ட கணக்கெடுப்பில், ஊழல் கலாச்சாரத்திற்கு பங்களிக்கும் காரணிகளாக பொதுமக்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர். 

நாட்டில் சரியான சட்டம் ஒழுங்கு இல்லாததே அதற்குக் காரணம். நாட்டில் ஊழல் கலாச்சாரம் உருவாகிறது. மேலும், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.