எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி!






மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், எல்ல பகுதியில் இடம்பெற்ற துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (08) திங்கட்கிழமை மண்முனை மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் த. கோபாலபிள்ளை தலைமையிலான பிரதேச சபை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சலி நிகழ்வின் போது, உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்ததோடு, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலும் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டது.