ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் 2025 இற்கான கற்றல் உதவி செயற்றிட்டம் மூலம் மட்/துறைநீலாவணை முன்பள்ளி பாலர் பாடசாலையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மிகவும் சிரமத்தின் மத்தியில் தரையிலிருந்து படித்த சின்னஞ் சிறார்களின் கஷ்டத்தை போக்கும் முகமாக மட்டக்களப்பு ஜீவனானந்தம் நற்பணி மன்றத்தின் தலைவரின் ஒழுங்கு படுத்துதலின் கீழ் 40 சிறார்களுக்கு தளபாட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது .
நிகழ்வில் சிறார்களின் பாடல்கள் மற்றும் நடனங்களும் இடம் பெற்றன.
இவ் நிகழ்வில் ஜீவனானந்தம் நற்பணி மன்ற அங்கத்தவர்கள் முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ,முன்பள்ளி சிறார்கள் , கிராமசேவகர், கிராம நலன்விரும்பிகள் ,பெற்றோர்கள், கலந்து சிறப்பித்தார்கள் .