.
அக்டோபர் 10 ,உலக உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகளை நடத்தவுள்ளது.
மேற்படி கல்வி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் உளசமூக ஆதரவு இல்லத்தின் தலைவியுமான தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் நடாத்தப்படும் இப்போட்டிகளில் முதலாம்,இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மூலம் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் ஆறு மாணவர்களுக்கும் உளவியல் விருது மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்க விரும்பும் அணுசரனையாளர் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். 0654900949 / 0775541758.
அகில இலங்கை ரீதியாக இடம் பெறவுள்ள இப்போட்டிகளில், பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 10,11, மற்றும் உயர்தர மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்ற முடியும்.
"உலக மனநல கூட்டமைப்பின் அவசியம்" எனும் தலைப்பில் ஆயிரம் சொற்களுக்கு மேற்படாமல் கட்டுரை அமைதல் வேண்டு
" மனநலமும் கூட்டமைப்பும் " எனும் தலைப்பில் ஐம்பது வரிகளுக்கு மேற்படாமல் கவிதை அமைதல் வேண்டும். ( புதுக்கவிதை அல்லது மரபு கவிதை)
ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரம் பங்கு பற்றுவதுடன் கட்டாயம் ஆக்கங்கள் கணினியில் அச்சிடப்பட்டு பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தி அனுப்பி வைத்தல் வேண்டும்.
ஆக்கங்கள் யாவும் எதிர்வரும், அக்டோபர் 5 க்கு முன்னர்,
பணிப்பாளர்,
சர்வதேச உளவியல்சார் கற்கைகள் பிராந்திய நிலையம்.
இல. 25/3, 4ம், குறுக்கு கல்லடி வேலூர் மட்டக்களப்பு
என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.





