கிழக்கு மாகாண விளையாட்டில் மட்டக்களப்பு அமிர்தகழி பாடசாலை சாதனை.







2025 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மட்/மட்/ அமிர்தகழி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகளான
ம.றொவேக்கா - 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்தில் முதலிடத்தையும், 100 மீற்றர் ஹாட்லஸ்ஸில் மூன்றாம் இடத்தையும்  பெற்றுச் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும்,
ந.டாரிகா -தட்டெறிதலில் 29.73 மீற்றர் தூரம் எறிந்து முதலிடத்தையும்,17 வயதுக்குட்பட்ட கபடி அணியின் முதல் நிலை வீராங்கனையாகவும் தேர்வானார்.

இவர்களின் வெற்றிகளின் பின்னணியில் வித்தியாலய அதிபர் வல்லிபுரம் முருகதாஸின் ஆலோசனையில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நிக்கோள் நிஷாந்தனின் உழைப்பு, அர்ப்பணிப்பு உண்மையில் பாராட்டப் பட வேண்டியது. மைதானமற்ற நிலையில் , வறுமையான குடும்பப் பின்னணிகளையுடைய இச் சிறார்களின் சாதனை சாதாரணமானதன்று. மேலும் இவ் வெற்றிகளுக்கு வலுச் சேர்த்த உடற் கல்வி ஆசிரியர் ஶ்ரீ. பிரபானந்தன் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திருமதி. நி. பிரதீஸ்கரன் ஆகியோருக்கும் பாடசாலைச் சமூகம் பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன், தேசிய மட்டத்திலும் இவர்கள் சாதனைகள் படைக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.