கண்டி மாவட்டத்தின் திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் .

 



 







கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம்  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அம்பாள்கோட்டை மகாவலி கங்கையில் வேல் பூட்டுதலுடன் பறவைக்காவடிகள் ஆரம்பமாகி அம்பாள்கோட்டை பிரதான வீதி வழியாக ஊர்வலமாக மூவாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சகிதம் ஆலயத்தை வந்தடைந்ததுடன் ஆலயத்தில் தீமிப்பும் இடம்பெற்றது.

முத்துமாரியம்மனின் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பறவைக்காவடிகள், வேல் காவடிகள் சகிதம் எடுத்ததுடன் வீதியில் தரிசனத்திற்காக இருந்த பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கினார்கள்.

கடந்த 30ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது மஹோற்சவம் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் மற்றும் இரவு இரதோற்சவம் இடம்பெற்று  செவ்வாய்க்கிழமை மகாவலி கங்கையில் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெறவுள்ளது.

 ந.குகதர்சன்