மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


 

 

 

 

 







 














 
























மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர்  கல்லூரியில்  இருந்து 2025ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையில்  தோற்றி சித்தியடைந்த  மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு   கல்லூரி அதிபர் K.சரவணபவன் தலைமையில்  இன்றைய தினம் 2025.09.08 நடராஜானந்த   மண்டபத்தில்    இடம்பெற்றது.
நிகழ்வுக்கு மட்டக்களப்பு வலய கல்வி பிரதி  பணிப்பாளர்(  அபிவிருத்தி ) திருமதி நிதர்ஷினி  மகேந்திரகுமார்,     குகதாஸ்  வலய கல்வி பிரதி  பணிப்பாளர் மற்றும் பிரபாகரன் கோட்டக்கல்வி பணிப்பாளர் /வலய கல்வி பிரதி பணிப்பாளர்(தமிழ் )  ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
2025ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கல்லூரியில் இருந்து 66-மாணவிகள் தோற்றி இருந்த நிலையில் வெட்டுப்புள்ளிக்கு மேல்  பெற்று  18-மாணவிகள் சித்தி அடைந்துள்ளார்கள் அத்தோடு விசேட தேவை உடைய மாணவி ஒருவரும் அவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளை பெற்று தகைமை பெற்றுள்ளார் .
70-புள்ளிகளுக்கு மேல் 64-மாணவிகள் பெற்றிருந்த நிலையில் 2025ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையில்  97% மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 மாணவர்களிடையே சமத்துவத்தை பேணும் முகமாகவும்  பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும் என்னும் நல்நோக்கத்துடனும்விவேகா பழைய மாணவர் சங்கத்தினூடாக "Music Academy Of KR Family Canada" அமைப்பினர் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பரிசில்களை வழங்கி வைத்தமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

 செய்தி ஆசிரியர்