தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய நில அதிர்வினால் 20 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் "துரதிர்ஷ்டவசமாக,
நிலநடுக்கத்தால் மனித உயிரிழப்புகளும் நிதி சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக,"
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் தளத்தில்
பதிவிட்டுள்ளார்.