உலக ஜனநாயக நாடுகளுக்கான தர வரிசையில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 


உலக ஜனநாயக நாடுகளுக்கான தர வரிசையில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஸ்டொக்ஹோமை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய, உலக ஜனநாயக நாடுகளுக்கான தர வரிசையில் இலங்கை கடந்த ஆண்டை விட 15 இடங்கள் முன்னேறியுள்ளது. 
 
அரசாங்கத்தை தெரிவு செய்யும் சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல ஜனநாயக குறிகாட்டிகளின் அடிப்படையிலேயே இலங்கை தரப்பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனினும், சில சவாலான விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
 
அதன்படி, ஒன்றுக்கூடுவதற்கான சுதந்திரம் உட்பட்ட சில விடயங்களில் கீழ்நோக்கிய நிலைமையே ஏற்பட்டுள்ளதாக ஸ்டொக்ஹோமை தளமாகக் கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.