இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது .

 


இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஓர் புதிய நற்செய்தி!
​குழந்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அவர்கள், ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 பெறுமதியான ஊட்டச்சத்து உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.
​இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் 1,500 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
​ நாட்டில் உள்ள 2.80 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் பிரதானமாகத் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.
​ கர்ப்ப காலத்தில் ஆறு மாதங்களும், பிரசவத்திற்குப் பின் பாலூட்டும் காலத்தில் நான்கு மாதங்களும் என மொத்தம் 10 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே இத்திட்டத்தின் நீண்டகால இலக்காகும்.
​ இந்தத் திட்டம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
​கடந்த ஏப்ரல் மாதத்தில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படவிருந்த நிதி, தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது அந்த நிதியைப் பயன்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களின் நலனை உறுதிசெய்ய இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.