அவுஸ்திரேலிய உயர் உயர் ஸ்தானிகராலய நன்கொடையாளர்களினால் வழங்கப்பட்ட நன்கொடை எவ்வாறு உபயோகப்படுத்தப்படுகிறது , சரியான முறையில் கையாளப்படுகிறதா என்பதை பரிசீலனை செய்வதற்காக 2025.9 .11 அன்று வருகை தந்திருந்தனர் .
அன்றைய
தினம் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய அலுவலக பிரதிநிதி
திருமதி. Sophie Gordon - இரண்டாவது செயலாளர் (அபிவிருத்தி )
Ms. Thilini Madiwala -சிரேஷ்ட திட்டமிடல் அதிகாரி - GEDSI மற்றும் மனிதாபிமான - வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை
Sarvodaya Shramadana இயக்க பிரதிநிதிகள்
திரு. Mr. JMM Niswi - சர்வோதய துணை நிர்வாக இயக்குநர்/திட்ட மேலாண்மை பிரிவின் இயக்குநர்
Mr. A. கரீம் - சர்வோதய பிராந்திய இயக்குநர் (வளம்)
Ms. திருமதி. ஹிருணி சசிகலா - திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வருகை தந்தனர்
உள்ளக
வகுப்பறை ,கற்பித்தல், சுகாதாரம் பேணப்படுத்தல் போன்றவை
அவதானிக்கப்பட்டது மேலும் சமையலறை , சாப்பாட்டறை குளியலறை உறங்கும் அறை
மற்றும் சுற்றாடல் ஆகியன மேற்பார்வை செய்யப்பட்டன.
சென்ட்
.மேரிஸ் பகல் நேர பராமரிப்பு நிலையம் மிகவும் நேர்த்தியாக
ஒழுங்கமைக்கப்பட்டு திறமையாக செயல்பட்டுவருகிறது என்பதனை அவர்களால்
அவதானிக்க முடிந்தது .
நிலைய பணிப்பாளர் திருமதி .ராஜினி
பிரான்சிஸ் , முகாமையாளர் திருமதி கமலினி சூரியகுமாரன் மற்றும்
பராமரிப்பாளர்களின் ,ஆசிரியர்களின் பங்களிப்பும் வேலைத்திறனும்
கடமையுணர்வும் கவனத்தை ஈர்த்தன .
பல சவால்களின் மத்தியிலும் இந்த
நிலையம் வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பது பணிப்பாளர் திருமதி ராஜினி
பிரான்சிஸ் அவர்களின் திட்டமிடலும், ஊக்கமும் விடாமுயற்சியும் கடினமான
உழைப்புமாகும் ,
நிலைய குழந்தைகளின் நிகழ்வுகள் ஆசிரியர்களினால் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டதுடன் பெற்றோகளின் கருத்துக்களும் பரிமாறப்பட்டன .
பராமரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமைந்திருந்ததாக பாராட்டி பதிவு ஏட்டில் பதிவு செய்திருந்தனர்
முறையான
கல்வித்தகைமையுடன், பயிற்சியும் பெற்ற பராமரிப்பாளர்கள் மற்றும்
ஆசிரியர்கள் அனைவரிடம் ஒரு புரிந்துணர்வுடனும் தோழமையுடன் வழி நடாத்தும்
பணிப்பாளர் திருமதி .ராஜினி பிரான்சிஸ் இந்த சிறுவர்கள் நிலையத்துக்கு
முற்றிலும் பொருத்தமானவர் என்பதை இந்த வருகை எமக்கு உணர்த்துகின்றது.
செய்தி ஆசிரியர்