கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் .

 



 

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு  நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதம்  ஜீவபுரம்  பகுதியில் நேற்று (6) இரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி  பொலிசார் தெரிவித்தனர். 


சந்திவெளி ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த. இரு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


மது போதையில்  தண்டவாளத்தில் தலையினை வைத்து தூங்கியதினால்  தலை துண்டிக்கப்பட்ட நிலையில் புகையிரதத்துடன் மோதுண்டு   உயிரிழந்துள்ளார் சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது  
காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது  .விபத்து தொடர்பில் சந்திவெளி  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 வரதன்