மூன்று பொலிசாருக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை.

 


பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசாருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வௌ்ளிக்கிழமை (12) , ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2004இல், பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிசார், பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலைமையில், சட்டவிரோத மதுபானம் தேடி ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்தினர்.

இதன்போது ஹோட்டல் முகாமையாளருக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொலிசார் அவரைத் தாக்கியதில் முகாமையாளர் உயிரிழந்தார்.

இதையடுத்து, நான்கு பொலிசாரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.