அரசாங்கத்தின் உள்ளூராட்சி வாரத்தின் வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் 'மறுமலர்ச்சி நகரம்' தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் உள்ளூராட்சி வாரத்தை ஒட்டி மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
இந்த தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினால் சுற்றாடல் மற்றும் மர நடுகை நிகழ்ச்சி திட்டங்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நாவக்குடா சந்தைக்கு முன்பாக பயன் தரும் நிழல் மரங்களான கொன்றை மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு மாநகர சபை உயர் அதிகாரிகள் மாநகர சபையின் உறுப்பினர்கள் ஊழியர்கள் என்ன பலரும் இதில் கலந்து கொண்டனர்.
வரதன்