2025 பெப்ரவரி 9 ஆம் திகதி
அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்குள் வைத்துப் பிரபல பாதாள உலகக் குழு
உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்தார்
எனக் குற்றம் சுமத்தப்பட்ட, இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச்
சென்றுள்ளதாக, கண்டறியப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையினர், இதனைக்
கண்டறிந்துள்ளனர் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் கைது
செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும்
பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும்
போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் குறிவைத்து இலங்கை காவல்துறை, இந்தோனேசிய
காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) நடத்திய கூட்டு
நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் நடந்தன.
இதேவேளை, கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ
சலிந்த மற்றும் பெக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது 72 மணி நேரத்
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.





