முன்னாள் காதலியைச் சுட்டுக் கொல்ல முயன்ற காதலநை தேடி போலீசார் வலை வீச்சு .

 


இன்னொரு வரை காதலித்த தனது முன்னாள் காதலியைச் சுட்டுக் கொல்ல முயன்ற காதலன் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிகஹவத்தையை சேர்ந்த 24 வய து இளம் பெண் ஒருவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் காதல் கொண்டிருந்த போதிலும் இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டு இதனால் சுமார் ஒரு வருட காலம் தொடர்பின்றி இருந்துள்ளனர்.

எனினும் காதலி இன்னொருவரைக் காதலிப்பதை அறிந்த முன்னாள் காதலன்,  வேலைக்காக ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்த  காதலியை இடைமறித்து துப்பாக்கியைக் காட்டி எச்சரித்து விட்டுத் தலைமறைவாகியுள்ளார். பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வருவதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.