காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

 


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வி, உயர்கல்வி தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுவர் பாதுகாப்பு குழுவினை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தலும் அதன் இயங்கு நிலையை பரிசோதித்தலும் என்னும் தலைப்பிலான போட்டி நிகழ்ச்சியில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 65 பாடசாலைகளில் இந்த சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுவினை நடைமுறைப்படுத்தல் அதன் இயங்கு நிலைகள், அதனால் சமூகத்துக்கு ஆற்றப்படும் பங்களிப்புகள்
தொடர்பான 13 சுட்டிகளை உள்ளடக்கிய வகையில் நேரடியான அவதானிப்பு மற்றும் பரிசீலனைகள் இடம்பெற்று புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன.