எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தங்காலை நகர சபைக்கு சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஆறுதல் கூறினார் .

 


எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து போன்ற துயரங்களைத் தடுக்க அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடியும் என்றாலும், குறித்த சட்டங்கள் செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவும் தேவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 
 
எல்ல, வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தங்காலை நகர சபைக்கு சென்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 
 
இதுபோன்ற துயரங்கள் இயற்கை பேரழிவுகள் அல்ல என்றும், இந்த விபத்துகள் தடுக்கக்கூடியவை என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.