அகில இலங்கை மல்யுத்த வீராங்கனைகளாக மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் தெரிவு.





 







பாடசாலைகளுக்கு இடையிலான அகில இலங்கை மல்யுத்த விளையாட்டுப் போட்டியில்  விவேகானந்தா மகளிர் கல்லூரியினை சேர்ந்த செல்விகளான தே.தர்மி மற்றும் வா.கனிக்கா ஆகியோர்கள் தங்கப்பதக்கத்தினை வென்று மீண்டும் அகில இலங்கை ரீதியாக  வி.ம கல்லூரியின் நாமத்தினை ஒலிக்கச் செய்துள்ளார்கள்  அத்தோடு இவ்விரு மாணவிகள் கடந்த வருடமும் முறையே 18/20 வயதின் கீழ் பிரிவில் போட்டியிட்டு பதக்கங்களை வென்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் அகில இலங்கை மல்யுத்த வீராங்கனையாக செல்வி தே.தர்மி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது நம் மண்ணுக்கும் கல்லூரிக்கும் பெருமையாகும்.
மேலும்20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான மல்யுத்தப்போட்டியில் அகில இலங்கை ரீதியாக விவேகானந்தா மகளிர் கல்லூரி 2ம் இடத்தினை கைப்பற்றி அதற்கான கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது .
இம்மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை வரவேற்கும் நிகழ்வில் கல்லூரி அதிபர், கல்லூரி நிர்வாகத்தினர், சி.தே.பா நிர்வாகத்தினர், சி.தே.பா.ப.மா சங்கத்தினருடன் வி.ப.மா.ச நிர்வாகத்தினரும் கலந்துகொண்டிருந்தனர். வி.ப.மா.ச சார்பாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பினை அளித்ததுடன் பயிற்றுனர் திரு. வே திருச்செல்வம் அவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தது.  
இம்மாணவர்களை போட்டிக்கு தயார் படுத்தியது மாத்திரமல்லாமல் அவர்களின் திறமையினை மழுங்கடிக்க விடாமல் அக்கறையுடன் செயற்பட்ட சிவானந்த தேசிய பாடசாலை மல்யுத்த வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளர் திரு.வே திருச்செல்வம் அவர்களுக்கு வி.ப.மா.ச சார்பாக மீண்டும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டது .