நீதிமன்றங்களின் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், நிதி பிரச்சினைகளுக்காக,சிறப்பு மத்தியஸ்த சபை.

 


நீதிமன்றங்களின் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், நிதி பிரச்சினைகளுக்காக,சிறப்பு மத்தியஸ்த சபைகளை  நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ், கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிதி பிரச்சினைகளுக்காக சிறப்பு மத்தியஸ்த சபைகள் நிறுவப்படும் என்று அவர் கூறியுள்ளார்.