சங்காரம் திரைப்படத்தில் துணை பெண் நடிகைக்கான விருதினை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளரும் நடிகையுமான கிருஷிகா புஷ்பராசா அவர்கள் பெற்றுள்ளார்.

 

 












பரணிதரன் தயாரிப்பிலும் கோடீஸ்வரன் அவர்களுடைய இயக்கத்திலும் உருவாகி இருக்கக்கூடிய சங்காரம் திரைப்படத்தில் துணை பெண் நடிகைக்கான விருதினை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளரும் நடிகருமான கிருஷிகா புஷ்பராசா அவர்கள் பெற்றுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு பெருமை சேர்த்திருக்க கூடிய விடயமாக இருக்கிறது.

இலங்கை மன்றக்கல்லூரி கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்ற குவியம் விருதுகள் 2025 விழாவில், நடிகை மற்றும் ஊடகவியலாளர் கிருஷிகா புஸ்பராசா  அவர்கள் சிறந்த பெண் துணை நடிகை விருதினை வென்றார். அவரது “சங்காரம் ” திரைப்படத்தில் வெளிப்படுத்திய உறுதியான, காத்திரமான  நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டு, வரவேற்கப்பட்டு இந்த உயரிய விருதை அவருக்கு பெற்றுக்
கொடுத்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டிலிருந்து 2025  தற்போது வரை தன்னுடைய ஊடக பயணத்திலே பணியாற்றிக்கொண்டு தனக்கான அங்கீகாரங்கள் பலவற்றை பெற்றுக் கொண்டிருக்க கூடிய ஒரு பெண் ஊடகவியலாளர். அதுமட்டுமல்லாது  மட்டக்களப்பைச் சேர்ந்த கலைஞராகவும் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேற்பட்டதாக அனுபவம் கொண்டதாகவும் கலைத்துறையில் பல வருட காலமாக சாதனை புரிய வேண்டும் என்று முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கக் கூடிய கிருஷிகா அவர்கள் தன்னுடைய சொந்த முயற்சியால் பெண் முயற்சியாளராக  மட்டக்களப்பு மாவட்டத்திலே #Kirush Creations (pvt) Ltd  எனும் தனியார் நிறுவனம் ஒன்றை சொந்தமாக உருவாக்கி அதற்கு உரிமையாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.
செய்தி வாசிப்பாளராக மாடலிங் துறையிலும் நடிப்பு துறையிலும் சிறப்பாக வலம் வருகிறார்.  

அந்த வகையிலே இவருக்கு இந்த சங்காரம் திரைப்படத்திற்கான பெண் துணை நடிகருக்கான  விருதினை பெற்றிருப்பது உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் எங்களுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய ஒரு விடயமாக இருக்கிறது.
எம் கலைஞ்சர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவருடைய  பயணங்கள் சிறப்புற  battimedia.lk  ஊடகம்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது .