கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கைத்தொழில் முயற்ச்சியாளர்களை இனங்காண முகமாக இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று மட்டக்களப்பு சத்துருக்கானில் உள்ள சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்றதுமற்றும்
இதன்போது மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சி ஆளர்களினால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும்பாடசாலை மாணவர்களினால் உருவாக்கப்பட்ட கைப் பொருள்களின் கண்காட்சி இங்குஇடம்பெற்றது பிரபல பாடசாலைகளின் வர்த்தக பிரிவு மாணவர்கள் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உயர் அதிகாரிகள்மற்றும் அரச திணைக்கலங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பணிப்பாளர் எஸ் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளையக்கல்வி பிரதி பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரன் கலந்து கொண்டார்
இந்தப் பயிற்சி பட்டறை நிகழ்வின் மூலம் சமூக வலைத்தளங்கள் ஊடாக புதிய தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு பாடசாலை மட்டத்திலிருந்து புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வரதன்

.jpeg)
.jpeg)


.jpeg)





