நாட்டில் ராஜபக்சக்களின்
அரசியல் இனி செல்லுபடியாகாது, ஏனெனில் மக்கள் அரசியலின் உண்மையான தன்மையை
அங்கீகரித்துவிட்டனர் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் கட்சி எவ்வாறு தோன்றினாலும் அதன் அரசியல் பயணம் மக்களின் ஆணையினைப் பொறுத்தே அமையும் என அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் இப்போதும் அரசியலின்
யதார்த்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறார்கள் என்றும், மக்களால்
நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை என்றும் அவர்
மேலும் கூறினார்.





