கனடாவில் இருந்து சிகிச்சைக்காக வடமராட்சி வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


கனடாவில் வாழ்ந்து வரும் வடமராட்சி கல்லுவம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் தனது மகளின் மருத்துவத் தேவைக்காக வடமராட்சி கல்லுவம் பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு வந்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மகளின் மருத்துவத் தேவைக்காக வந்த நிலையில் குறித்த சிறுமி நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகக் கொண்ட சத்தீஸ்வரன் சயினகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இத்துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை (08) வடமராட்சி கல்லுவத்தில் உள்ள வீட்டில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.