மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள SHANE பாலர் பாடசாலையினால்
ஆக்க கண்காட்சி மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலையத்தில் முன்பள்ளியின்
அதிபர் திருமதி டிலினி குஷாந்த் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு அதிதிகளாக
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் குழந்தை நல வைத்தியர் விஷ்ணு சிவபாதம் அவர்களும்,
மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் முன் பள்ளிக்கான உதவி கல்வி பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் அவர்களும்,
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. திருச்செல்வம் மேகராஜ் அவர்களும்
மண்முனை
மேற்கு வலய கல்வி அலுவலகத்தின் முன் பள்ளிக்கான உதவி கல்வி பணிப்பாளர்
திரு சுப்பிரமணியம் கணேஷ் அவர்களும் பங்கேற்றிருந்தனர்.
ஷேன் பாலர்
பாடசாலையில் 35சிறார்கள் பயின்றுவரும் நிலையில் அவர்கள் வரைந்த ஓவியங்கள்,
கைவினைப் பொருட்கள், மற்றும் பல்வேறு கலைப் படைப்புகளை
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .
இவ்வாறான ஆக்க கண்காட்சியானது
குழந்தைகளின் கற்பனைத் திறன், சமூக உணர்ச்சி, விமர்சன சிந்தனை, மற்றும்
உளவியல் நலனை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
கண்காட்சியை பார்வையிட
18க்கும் மேற்பட்ட முன்பள்ளிகளும், பொதுமக்களும்மாக 650 க்கு மேற்பட்டோர் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது






















































































