தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் திருச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் அவர் எம்.ஜி.ஆர். சிலை அருகே செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய்யை காண வந்த தொண்டர்கள் அவரது பிரசார பேருந்தை பின் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார பேருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





