தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊர்திப் பயண திருக்கோவிலில் ஆரம்பித்து பொத்துவில் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்களின் அஞ்சலியினைத் தொடர்ந்து ஊர்தியானது காரைதீவினை அடைந்தது.
காரைதீவில் முன்னாள் தவிசாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச கிளைத் தலைவருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஊர்தியானது உணர்வுபூர்வமாக வரவேற்கப்பட்டு பொது மக்களின் அஞ்சலிகள் இடம்பெற்றன. இதன்போது காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது ஜெயசிறில் அவர்கள் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மக்களுடன் இணைந்து மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் காரைதீவு பிரதேசத்திலிருந்து நினைவு ஊர்தியினை பற்றோடு வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கலந்து கொள்ள சட்டத்தரணி ஹபீப் றிபான் சீனா பயணம்.
இலங்கையில் உள்ள சீன தூதரகத்தினால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் இளம் தலைவர்களுக்கான செயலமர்வில் பங்கு பெற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திக்கான செயற்றிட்ட பணிப்பாளரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று சீனா பயணமாகின்றார்..
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முதுநபீன் முஷாரப் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே சீனா பயணமானார்.
இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய கட்சியின் தேசிய தலைவர் சட்ட முதுமானி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் மற்றும் கௌரவ பாரா…
2025 ஆம் ஆண்டிற்க்கான மாகாண மட்ட போட்டிகளான பெரு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு வலயம் 1ம் இடம்.
மட்டக்களப்பு வலயத்தை பொறுத்த வரையில் ,
மாகாண மட்ட பெரு விளையாட்டுக்களில்
(Games) மட்டக்களப்பு வலயம் ,
ஆண்கள்(Boys) பிரிவில் 238 புள்ளிகளை பெற்று 1ஆம் இடத்தையும்,பெண்கள்(Girls) பிரிவில் 258 புள்ளிகளை பெற்று 1ஆம் இடத்திலும் , மொத்தமாக(Overall Total) 496 புள்ளிகளை பெற்று overall games பிரிவில் 1 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது.
ஆண்கள்,பெண்கள் மற்றும் மொத்தமாக 3 விருதுகளையும் தனதாக்கிக்கொண்டுள்ளது
கடந்த வருடங்களைப் போல் முதல் இடத்தினை மீண்டும் தக்க வைத்துள்ளோம், என்பது பெருமைக்குரிய விடயமாகும்
இம்முறை மாகாண மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற
மாணவர்களை பயிற்றுவித்த அனைத்து விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள்
மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
2025 ஆம் ஆண்டிற்க்கான மாகாண மட்ட போட்டிகளான பெரு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு வலயம் 1ம் இடம். | https://www.battimedia.lk/2025/09/2025-1.html
சீனாவில் நடைபெறும் இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கலந்து கொள்ள சட்டத்தரணி ஹபீப் றிபான் சீனா பயணம். | https://www.battimedia.lk/2025/09/blog-post_176.html






