மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரி அதிபர் ச .கணேசமூர்த்தி தலைமையில் 2025.09.16. செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் சுப வேளையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கலைமகள் சிலை திறப்பு விழா இடம் பெற்றது .
பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டு 65ஆவது வருட நிறைவை முன்னிட்டு கலைமகளுக்கு சிலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
விசேட அதிதியாக பிரதி கல்விப்பணிப்பாளர் /கோட்டக்கல்வி பணிப்பாளர் (மண்முனை வடக்கு)ஆர் .ஜெ .பிரபாகரன் கலந்து சிறப்பித்தார் .
அதனை தொடர்ந்து கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் சிலை அமைப்பதற்கு அனுசரணையாளராக செயலாற்றியவர்களுக்கும் , ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.



















































