மட்டக்களப்பு மாவட்ட தேற்றாத்தீவு பால் மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு பாற்குட பவனியும், சங்காபிஷேகமும் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மஹா கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து கடந்த 12 தினங்களாக ஆலயத்தில் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அதன் பூர்த்தியை முன்னிட்டு தேற்றாத்தீவு வடபத்திர காளியம்மன் ஆலயத்திலிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் பங்குகொள்ள பாற்குட பவனி நடைபெற்றது.
பாற்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததுடன் பாற்குடங்கள் கொண்டு பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1008 சங்குகளுக்கும், பிரதான கும்பங்களுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம் கொண்டு செல்லப்பட்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன் சங்குகள் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டது.
சங்காபிஷேகத்தினை தொடர்ந்து முருகப் பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.