ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர்
புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
பதவியேற்பு விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் எஸ். திரவியராசாவும் கலந்து கொண்டார்.
( வி.ரி.சகாதேவராஜா)









